/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சந்தவேலுார் மேம்பாலத்தில் ஜல்லி குவியலால் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அபாயம்

ADDED : டிச 24, 2025 06:50 AM

ஸ்ரீபெரும்புதுார்: சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுார் மேம்பாலத்தில், ஜல்லி கற்கள் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் சென்று வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
விபத்தை தவிர்க்க, சென்னை -- பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த, சந்தவேலுாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செல்லும் மார்க்கமாக, ஜல்லி கற்கள் மற்றும் மண் அதிக அளவு குவிந்துள்ளது.
இதனால், மேம்பாலத்தில் இருந்து இறங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் குவிந்துள்ள ஜல்லியில் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலையில் குவிந்தள்ள ஜல்லி கற்கள் குவியலை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.