/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் ஆய்வுக்கு தோண்டிய பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
குடிநீர் ஆய்வுக்கு தோண்டிய பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
குடிநீர் ஆய்வுக்கு தோண்டிய பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
குடிநீர் ஆய்வுக்கு தோண்டிய பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 24, 2025 06:49 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் தெருவில், குடிநீரில், கழிவுநீர் கலப்பதை கண்டறிய பள்ளம் தோண்டப்பட்டதோடு, கிடப்பில் போடப்பட்டுள்ள சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள மதுராந்தோட்டம் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிய, பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள மதுராந்தோட்டம் தெரு நுழைவாயில் பகுதியில், ஒரு வாரத்திற்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது.
ஆனாலும், கழிவுநீர் கலக்கும் பகுதியை கண்டறிய முடியவில்லை. தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் அப்படியே போடப்பட்டுள்ளது. இதனால், அகலம் குறைவான மதுராந்தோட்டம் தெரு வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளத்தில் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, குடிநீரில், கழிவுநீர் எந்த இடத்தில் கலக்கிறது என்பதை கண்டறியும் பணியை விரைந்து முடித்து, பேருந்து நிலையம் ஒட்டியுள்ள சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை, மாநகராட்சி நிர்வாகம் மூட வேண்டும் என, வாகன ஓட்டிகளும், மதுராந்தோட்டம் தெரு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

