/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரியில் இருந்து சிதறும் ஜல்லி கற்களால் பழையசீவரம் சாலையில் விபத்து அபாயம்

ADDED : அக் 05, 2025 01:05 AM

வாலாஜாபாத்:லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லிகற்களால், பழையசீவரம் சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வாலாஜாபாதில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில் பழையசீவரம் உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் சுற்றி உள்ள கிராமங்களில் அரசு அனுமதி பெற்ற தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன.
இந்த கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் திருமுக்கூடல் பாலாற்று பாலம் வழியாக பழையசீவரம் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றன.
பெரும்பாலான லாரிகளில், அதிகளவு பாரம் ஏற்றுவதோடு தார்ப்பாய் மூடாமல் செல்வதால், பாலாற்று பாலம் மற்றும் பழையசீவரம் சாலைகளில் லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறுகின்றன.
குறிப்பாக பழைய சீவரம் மலை பேருந்து நிறுத்தம் அருகிலான சாலையில் அதிக அளவிலான ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால், சுற்றுவட்டார பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.