/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடிகள் வளர்ந்துள்ள நாகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
செடிகள் வளர்ந்துள்ள நாகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
செடிகள் வளர்ந்துள்ள நாகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
செடிகள் வளர்ந்துள்ள நாகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 05, 2025 01:04 AM

காஞ்சிபுரம்:செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள காஞ்சிபுரம் நாகுளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 31வது வார்டில், நாகுளம் உள்ளது. அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்தில், சலவை தொழிலாளர்கள் துணி துவைத்து வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் கழிவுநீர் விடப்பட்டதால் குளத்து நீர் மாசடைந்துவிட்டது.
இதனால், குளத்து நீரில் சலவை தொழிலாளர்கள் துணி துவைக்க முடியாத நிலை உள்ளது.
மேலும், குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளாலும் குளம் சுருங்கிவிட்டது. மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்துள்ளதால், குளத்தின் நீர்பிடிப்பு பகுதியும் குறைந்து வருகிறது.
எனவே, நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் நாகுளத்தை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.