/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தும்பவனத்தில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு
/
தும்பவனத்தில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 05, 2025 01:02 AM

காஞ்சிபுரம்:தும்பவனத்தில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட தும்பவனம் பகுதியில், சீமை கருவேல மரங்கள் உள்ள பகுதியில், பன்றிகள் கூட்டம் கூட்டமாக தஞ்சமடைந்துள்ளன.
உணவுக்காக வெளியே வரும் பன்றிகள், சாலையோரம் கிடக்கும் குப்பைகளை கிளறுகின்றன. வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை நாசப்படுத்துகின்றன. இதனால், தோட்டங்களில் செடிகள் வளர்க்க முடியாத நிலை உள்ளது. மேலும், பன்றிகளால் தும்பவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே வாகன ஓட்டிகளுக்கும், பகுதி மக்களுக்கும் தொல்லை கொடுத்து வரும் பன்றிகளை பிடித்து, வனப்பகுதியில் விட வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தும்பவனம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.