/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை மைய தடுப்பில் மண் குவியல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலை மைய தடுப்பில் மண் குவியல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலை மைய தடுப்பில் மண் குவியல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலை மைய தடுப்பில் மண் குவியல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 05, 2025 01:00 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலை மையத் தடுப்பின் இருபுறமும் சேர்ந்துள்ள மண் குவியலால், விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
உத்திரமேரூரில், புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலையை பயன்படுத்தி, வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றன.
இந்நிலையில், இருவழிச் சாலையாக இருந்த இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.
இதை தவிர்க்க, வாகன ஓட்டிகள் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத் துறையினர் புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலையை பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்தனர்.
அதில், இரண்டாவது கட்டமாக மீனாட்சி கல்லுாரி முதல் உத்திரமேரூர் வரை, 26 கோடி ரூபாய் செலவில், 3.6 கி.மீ., நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப் பட்டது.
தற்போது, உத்திரமேரூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல், மையத் தடுப்பின் இருபுறமும் மண் குவியலாக உள்ளது. மண் குவியலில் புற்களும் வளர்ந்து வருகின்றன.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மண் குவியலில் சிக்கி, நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, நெடுஞ்சாலையின் மையத் தடுப்பின் இருபுறமும் சேர்ந்துள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.