ADDED : அக் 08, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த குறைதீர் கூட்டம்ரத்து செய்யப்பட்டு இம்மாதம் 15க்கு மாற்றப் பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன், மாதந்தோறும் இரண்டு செவ்வாய்க்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடத்துகிறார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறார். இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுவதால், காஞ்சிபுரத்தில் அமைச்சர் குறைதீர் கூட்டம் நடைபெறாது என, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் அன்பரசன் தலைமையில், இம்மாதம் 15ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.