ADDED : செப் 24, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம:ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், 27; இவர், ஆன்லைன் மோடியில் ஈடுபட்டது சம்பந்தமாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விக்கு பரிந்துரை செய்தார்.
இதை தொடர்ந்து சரத்குமாரை, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னை புழல் சிறையில் உள்ள சரத்குமாரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.