/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரலிங்கனார் சித்தருக்கு குருபூஜை விழா
/
சங்கரலிங்கனார் சித்தருக்கு குருபூஜை விழா
ADDED : அக் 26, 2025 11:08 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர லிங்கனார் சித்தரின் குரு பூஜை விழா நடந்தது.
காஞ்சிபுரம் சங்கர லிங்கனார் சித்தரின் ஜீவசமாதி, சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெரு, பணாமணீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, அனந்ததீர்த்த குளத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.
வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள், சங்கரலிங்கனார் சித்தரின் ஜீவ சமாதியில் வழிபட்டு வருகின்றனர்.
சங்கரலிங்கனார் சித்தரின் கோவில் குறித்து, காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற சங்கரலிங்கனார் சித்தரின் குரு பூஜை விழா நேற்று, காலை 9:00 மணிக்கு சிறப்பு யாகத் துடன் துவங்கியது.
அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் மலர் அலங்காரமும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

