/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹார்டுவேர்ஸ் கடையில் குட்கா பதுக்கியவர் கைது
/
ஹார்டுவேர்ஸ் கடையில் குட்கா பதுக்கியவர் கைது
ADDED : நவ 07, 2024 12:52 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், மாவட்டம் முழுதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒரகடம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பண்ருட்டி கண்டிகை பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களளை பதுக்கி, விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, பண்ருட்டி கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள, ‛மா ஆஷாபுரா' ஹார்டுவேர்ஸ் கடையில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், ஹார்டுவேர்ஸ் கடையின் மேல் தளத்தில் உள்ள அறையில், ஹான்ஸ், விமல், ஸ்வாகத், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளர் கைலாஷ், 18, என்பவரை கைது செய்து விசாரித்ததில், பெங்களூருவில் இருந்து, ஹார்டுவேர்ஸ் பொருட்கள் வாங்கிவரும் போது, குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, ஒரகடம், வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து, கைலாஷை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 66 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.