ADDED : பிப் 05, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ஆனைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 75. இவர், தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக, உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது, விற்பனைக்கு வைத்திருந்த 5.7 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அண்ணாமலையை கைது செய்தனர். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.