/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைத்தறி தொழிலாளர் சங்கம் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
/
கைத்தறி தொழிலாளர் சங்கம் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2024 09:42 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள பட்டு சேலைகளை, கோ - ஆப்டெக்ஸ் வாயிலாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என, பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் கைத்தறி துறை துணை இயக்குனர் அலுவலகம் முன் சங்க தலைவர் லட்சுமிபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், கூட்டுறவு சங்கங்களில் 100 கோடி ரூபாய் மேல் தேங்கியுள்ள பட்டு சேலைகளை உடனடியாக கோ- - ஆப்டெக்ஸ் வாயிலாக கொள்முதல் செய்ய வேண்டும்.
தேங்கியுள்ள பட்டு சேலைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும். நெசவாளர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சம்மேளன தலைவர் முத்துகுமார், மாவட்ட நிர்வாகிகள் செயலர் ஜீவா, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.
மேலும், நெசவாளர் வாழ்வாதாரம் பாதுகாக்கவும், தொடர்ந்து தொழில் கிடைக்க கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்க கோரி துணை இயக்குனரிடம் மனு அளித்தனர்.

