/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் அந்தரத்தில் தொங்கும் மின் கம்பிகள்
/
வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் அந்தரத்தில் தொங்கும் மின் கம்பிகள்
வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் அந்தரத்தில் தொங்கும் மின் கம்பிகள்
வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் அந்தரத்தில் தொங்கும் மின் கம்பிகள்
ADDED : பிப் 12, 2025 01:57 AM

காஞ்சிபுரம்,வாலாஜாபாத் - வண்டலுார் வழியாக, தாம்பரம் செல்லும் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக தாம்பரம் வரை செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் வழியாக செல்லும் மின்கம்பியை தாங்கி பிடிக்கும் பீங்கான்கள் பொருத்தவில்லை.
இதனால், கம்பத்தை ஒட்டி மின் கம்பிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. பலத்த காற்று அடிக்கும் போது, மின்கம்பிகள் உரசினால், வாலாஜாபாத் - -வண்டலுார் சாலையில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, ஆபத்தாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பிகளை, மின் கம்பத்தில் இழுத்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.