ADDED : டிச 31, 2024 01:32 AM

காஞ்சிபுரம், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, சின்ன காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை 7:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு மாட வீதியில் உள்ள, 18 அடி உயர பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு, நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவிலில் மூலவருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது. அதேபோல, வெள்ளகுளம் தெரு ஆஞ்சயேநருக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது.
அதேபோல, கோவிந்தர்பாடி அகரம் கிராமத்தில்,வீர ஆஞ்சநேயர் கோவிலில், மாலை 4:00 மணிக்கு உறி அடிக்கும் நிகழ்ச்சி மற்றும் சறுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் வீரஆஞ்சநேயர் வீதியுலா வந்தார். அதேபோல், முத்தியால் பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயருக்கு, வெண்ணை காப்பு அலங்காரம் நடந்தது.இதையடுத்து, திம்மரா ஜாம்பேட்டை ஸ்ரீராம ஆஞ் சநேயர் கோவிலில், இரவு ஊஞ்சல் சேவை நடந்தது.
அதேபோல், வாலாஜாபாத், திம்மராஜன்பேட்டையில் ராம ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ராம ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், வடமாலை அணிவிக்கப்பட்டது.