/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீர ஆஞ்சநேயர் கோவிலில் 30ல் அனுமன் ஜெயந்தி
/
வீர ஆஞ்சநேயர் கோவிலில் 30ல் அனுமன் ஜெயந்தி
ADDED : டிச 27, 2024 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தர்பாடி அகரம் கிராமத்தில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, வரும் 30ல் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு வீர ஆஞ்சநோயருக்கு மஹா அபிஷேகம் மற்றும் வெண்ணை, வடமாலை சாற்று முறை நடைபெற உள்ளது.
மாலை 4:00 மணிக்கு உறி அடித்தல், சறுக்குமரம் ஏறுதல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர் வீதியுலா மற்றும் நாடகம் நடைபெற உள்ளன.

