/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் கொட்டப்படும் குப்பை ஆரம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் கொட்டப்படும் குப்பை ஆரம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் கொட்டப்படும் குப்பை ஆரம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் கொட்டப்படும் குப்பை ஆரம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : ஆக 08, 2025 02:04 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஆரம்பாக்கம் நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வண்டலுாரில் இருந்து பிரிந்து, ஒரகடம், வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
தவிர, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றன.
இதில், சாலமங்கலம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கடைகளில் இருந்து வீணாகும் பிளாஸ்டிக் குப்பை, உணவு கழிவு, இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை மூட்டையாக கட்டி, இரவு நேரங்களில் இந்த சாலையோரம் கொட்டி வருகின்றனர்.
இதனால், இப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், இரை தேடி வரும் கால்நடைகள், திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.