/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலி மனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
காலி மனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காலி மனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காலி மனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 16, 2025 12:33 AM

ஸ்ரீபெரும்புதுார்:காலி மனைகளில் கழிவு நீர் தேங்காமல், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் ஒரகடம், வல்லம் - வடகால் சிப்காட் தொழிற்பூங்காவில் பணிபுரியும் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள், வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், வல்லம் சந்தியம்மன் கோவில் அருகே உள்ள காலி மனையில், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி வருகிறது.
குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரால், அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் சூழல் உள்ளது.
எனவே, காலி மனைகளில் கழிவுநீர் தேங்காமல், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.