/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் குப்பை குவியல் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் குப்பை குவியல் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 03, 2025 01:41 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், பஞ்சுபேட்டை பெரிய தெருவில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மின்வாரிய துணை மின் நிலையம், திரவுபதியம்மன் கோவில், ஓணகாந்தேஸ்வரர் கோவில், பால் குளிரூட்டும் நிலையம் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இத்தெரு வழியாக கள்ளகம்பன்பட்டரை, கருப்படிதட்டடை, பஞ்சுபேட்டை, ஏகாம்பரநாதர் கோவில், ஒலிமுகமதுபேட்டை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் இருந்து பஞ்சுபேட்டை தெரு துவங்கும் இடத்தில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை குவியல் அகற்றப்படாமல் உள்ளது. இதில், கோழி, மீன் கழிவு கொட்டப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பஞ்சுபேட்டை பெரிய தெரு, சாலையோரம் உள்ள குப்பை குவியலை அகற்றவும், அப்பகுதியில் மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

