/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபாதையில் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
நடைபாதையில் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
நடைபாதையில் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
நடைபாதையில் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 29, 2025 12:53 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, பெரியார் நகர் அருகில், நடைபாதையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட மகாலிங்கம் நகர், இந்திரா நகர் விரிவு, திருவண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து வந்தனர். மேலும், காலி இடங்களில் போடப்படும் குப்பையை அகற்றி வந்தனர்.
இந்நிலையில், இரு மாதங்களாக மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க இப்பகுதிக்கு வருவதில்லை என, மகாலிங்கம் நகர் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், இப்பகுதியில் வசிப்போர் காலி இடங்களிலும், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, பெரியார் நகர் அருகே உள்ள நடைபாதையை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
நடைபாதையில் உள்ள குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றாததால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுத்தொல்லை, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று தினமும் குப்பை சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மகாலிங்கம் நகர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.