/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் 2 மணி நேரம் சாரல் மழை
/
ஸ்ரீபெரும்புதுாரில் 2 மணி நேரம் சாரல் மழை
ADDED : ஏப் 04, 2025 01:21 AM

ஸ்ரீபெரும்புதுார்:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாகம் குறைந்து, பரவராக மழை பெய்து வரும் நிலையில், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளை ஒட்டி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், ஒரு சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்றும், இன்றும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, காலை 8:00 மணி முதல், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மிதமான சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று காலை பெய்த சாரல் மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

