/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாயை ஆக்கிரமித்து சாய்தளம் ; நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்
/
வடிகால்வாயை ஆக்கிரமித்து சாய்தளம் ; நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்
வடிகால்வாயை ஆக்கிரமித்து சாய்தளம் ; நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்
வடிகால்வாயை ஆக்கிரமித்து சாய்தளம் ; நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்
ADDED : டிச 03, 2025 06:29 AM

காஞ்சிபுரம்: வள்ளல் பச்சையப்பன் தெரு மூங்கில் மண்டபம் அருகில், மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிந்த சாய்தளத்தை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர்.
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு மூங்கில் மண்டபம் அருகில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் உள்ள வணிக நிறுவனத்தினர் சிலர், தங்களது கடை முன் உள்ள கால்வாயை ஆக்கிரமித்து, மழைநீர் செல்லும் கால்வாய் பகுதியை அடைத்து கான்கிரீட் கலவை வாயிலாக சாய்தளம் அமைத்து இருந்தனர்.
இதனால், மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், காஞ்சிபுரத்தில் நேற்று மழை பெய்தபோது, மூங்கில் மண்டபம் பகுதியில் மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்கியது.
இதையடுத்து, கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சாய்தளத்தை பொக்லைன் இயந்திரம் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர். தொடர்ந்து கால்வாயை துார்வாரி சீரமைத்தனர்.