/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஹிந்து அறநிலைய துறை அலுவலகம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஹிந்து அறநிலைய துறை அலுவலகம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஹிந்து அறநிலைய துறை அலுவலகம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஹிந்து அறநிலைய துறை அலுவலகம்
ADDED : ஜூன் 20, 2025 02:04 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
உத்திரமேரூரில், தாலுகா அலுவலகம் அருகே, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம், பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு வரும் பொதுமக்கள் அமர போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் நீண்ட ஆண்டுகளாக புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2022 --- 23ம் நிதி ஆண்டில், பொது நிதியின் கீழ், 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, உத்திரமேரூர் முருகன் கோவில் அருகே, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் அலுவலகம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், கட்டடம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை பயன்பாட்டுக்கு திறக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, உத்திரமேரூர் சரக ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ப்ரீத்திகா கூறியதாவது:
ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் கட்டடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.