/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹாக்கி போட்டி உத்தரகண்ட் அசத்தல்
/
ஹாக்கி போட்டி உத்தரகண்ட் அசத்தல்
UPDATED : ஜூலை 29, 2025 09:36 AM
ADDED : ஜூலை 29, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தேசிய அளவில் நடந்து வரும் ஆடவருக்கான சப் - ஜூனியர் ஹாக்கி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், உத்தரகண்ட் அணி 27 கோல் அடித்து அபார வெற்றி பெற்றது.
ஹாக்கி இந்தியா மற்றும் ஹாக்கி யுனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, தேசிய அளவில் ஆடவருக்கான '15வது தேசிய சப் - ஜூனியர் சாம்பியன்ஷிப் - 2025' போட்டி, சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்னா ஹாக்கி அரங்கில் நேற்று துவங்கியது. நாட்டின் 29 அணிகள், நான்கு டிவிஷனாக போட்டியிடுகின்றன.

