/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளையப்பந்து சென்னை மாணவியர் உற்சாகம்
/
வளையப்பந்து சென்னை மாணவியர் உற்சாகம்
ADDED : டிச 03, 2025 06:36 AM
சென்னை: சென்னை வருவாய் மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டியில், குண்டூர் சுப்பையா, வேலம்மாள், முருக தனுஷ்கோடி பள்ளி மாணவியர் முதலிடங்களை கைப்பற்றினர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவியருக்கான வருவாய் மாவட்ட வளையப்பந்து போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், கீழ்ப்பாக்கத்தில் நடந்தது.
தனிநபர் 14 வயது பிரிவில், குண்டூர் சுப்பையா பள்ளியின் மிருதுளா ஸ்ரீ, 13, முதலிடத்தையும், முருக தனுஷ்கோடி பள்ளியின் தன்ஷிகா, 13, இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.
இரட்டையரில், குண்டூர் சுப்பையா பள்ளியின் மிருதுளா,மற்றும் பவித்ரா, 12, ஜோடி, முதலிடம் பிடித்தது.
தனிநபர் 17 வயது பிரிவில், குண்டூர் சுப்பையா பள்ளியின் அனன்யாலட்சுமி, 14, முதலிடத்தையும், தரம் ஹிந்துஜா பள்ளியின் தனுஷியா, 14, இரண்டாமிடத்தையும் கைப்பற்றினர்.
இரட்டையரில் வேலம்மாள் பள்ளியின் கிரிஷிகா ஸ்ரீ, 15, ரேகா, 15, ஜோடி முதலிடத்தை வென்றது.
தனிநபர் 19 வயது பிரிவில் ஆர்.பி.சி., பள்ளியின் தாரிகா, 16, முருக தனுஷ்கோடி பள்ளியின் ஹரணி, 16, ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். இரட்டையரில், முருக தனுஷ்கோடி பள்ளியின் ஹரணி, 16, மற்றும் ஜாக்குலின் சவுந்தர்யா, 16, ஜோடி, முதலிடத்தை பிடித்தது.

