/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 08, 2024 11:58 PM

காஞ்சிபுரம்:தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அ.தி .மு.க.,வினர் நேற்று, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட செயலர் சோமசுந்தரம் மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். தேரடி, பூக்கடை சத்திரம், சங்கர மடம், இரட்டை மண்டபம் சிக்னல் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் அ.தி.மு.க.,வினர் சொத்து வரியை உயர்த்திய ஆளும் தி.மு.க., அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சொத்து வரியை உடனே குறைக்க வேண்டும் என வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் பிடித்தவாறு அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில அமைப்பு செயலர் கணேசன், அ.தி.மு.க., நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பாலாஜி, வள்ளிநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதுார்
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, போதை பொருட்கள் புழக்கம் மற்றும் தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு விவகாரங்களில் தமிழக அரசை கண்டித்து, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் நகர செயலர் மோகன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதுார் கிழக்கு ஒன்றிய செயலர் முனுசாமி, மேற்கு ஒன்றிய செயலர் சிங்களிப்பாடி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.