/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது
/
மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது
ADDED : பிப் 07, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி: பூந்தமல்லி, குமணன்சாவடியைச் சேர்ந்தவர் குமார், 41. இவரது மனைவி சவுமியா, 35. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த குமார், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக சவுமியா காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த குமார், சவுமியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார்.
சவுமியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூந்தமல்லி போலீசார், குமாரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

