/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூலவர் அச்சு எடுத்த விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை
/
மூலவர் அச்சு எடுத்த விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை
மூலவர் அச்சு எடுத்த விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை
மூலவர் அச்சு எடுத்த விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை
ADDED : ஜூலை 12, 2025 09:35 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூலவர் அச்சு எடுக்கப்பட்டது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கோவிலில் விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சிபரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 30 கோடி ரூபாய்க்கு மேலாக செலவிட்டு திருப்பணிகள் தீவிரமாக நடக்கின்றன. மூலவர் உள்ளிட்ட சன்னிதிகளில் வழிபட முடியவில்லை என, பக்தர்கள் ஏற்கனவே புகார் தெரிவித்து வரும் நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி, கியாஸ் சிலிண்டருடன் வந்த 5 பேர், திடீரென மூலவர் சன்னிதியை அச்சு எடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு, தினேஷ் ஆகியோர், சிலையை திடீரென அச்சு எடுப்பதில் சந்தேகம் இருப்பதாகவும், சதி நடப்பதாக, கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் உதவி ஆய்வாளர் பாபு என்பவர், ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று ஆய்வு நடத்தினார். கோவிலில், மூலவர் சன்னிதியை மெழுகில் அச்சு . எடுத்தது ஏன் உள்ளிட்ட விபரங்களை கோவில் ஊழியர்களிடமும், அர்ச்சகர் மற்றும் புகார்தாரர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, உபயதாரர் மூலம், மூலவர் சன்னிதிக்கு வெள்ளி கவசம் செய்ய அச்சு எடுத்தது தெரியவந்துள்ளது. கோவிலின் மூலவர் சன்னிதி மற்றும் கோவிலின் பிற இடங்களை, உதவி ஆய்வாளர் பாபு ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, மூலவருக்கு வெள்ளி கவசம் செய்ய அறங்காவலர் குழு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மூலவர் அச்சு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை படிப்படியாக நடக்கும்,'' என்றார்.

