/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 30 அடி சாலை 15 அடியாக மாறிய அவலம்
/
காஞ்சியில் 30 அடி சாலை 15 அடியாக மாறிய அவலம்
ADDED : நவ 04, 2024 03:45 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே, குரு கோவில் எனப்படும் காயரோகணேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவில் அமைந்துள்ள சாலையில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், 15 அடிக்கும் மேலாக, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனம், கார், லாரி போன்ற வாகனங்கள் எளிதாக இயக்க முடியாத நிலை நீடிக்கிறது.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளால், அவ்வழியாக மின்தடம் தொடர்பான பணிகள் மேற்கொள்வதில், மின்வாரிய ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
தாயார்குளம் நான்குமுனை சந்திப்பில் இருந்து கிருஷ்ணன் தெரு வரை, 30 அடி அகலம் கொண்ட இச்சாலை, 15 அடியாக குறைந்துள்ளது. பல இடங்களில், குறுகியும், நீண்டும் உள்ளது. இச்சாலையை ஆக்கிரமித்து கடைகள், திண்ணை போன்றவை கட்டியுள்ளனர்.
எனவே, மாநகராட்சிக்குட்பட்ட இச்சாலை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் நகரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.