தேர்வு ஒருங்கிணைப்பாளர்களுக்கு வருவாய் வழி, திறன் படிப்பு பயிற்சி
தேர்வு ஒருங்கிணைப்பாளர்களுக்கு வருவாய் வழி, திறன் படிப்பு பயிற்சி
ADDED : ஜூலை 09, 2026 02:48 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில், என்.எம்.எம்.எஸ்., எனும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி பட்டறைக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் எழில், காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் விழியன் மற்றும் கல்வி ஆலோசகர் சரண்யா ஆகியோர் பங்கேற்று, மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வு ஆகிய பகுதிகளுக்கு மாணவர்களை எளிய முறையில் எவ்வாறு தயார்படுத்துவது, கடினமான கணக்குகளை புதிர்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் எவ்வாறு கையாளுவது என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பல்வேறு சுவாரசியமான உத்திகளுடன் கூடிய பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.
இந்த முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்து ஒன்றியங்களை உள்ளடக்கிய அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 275 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி துணை ஆய்வாளர் பாலச்சந்தர் ஒருங்கிணைத்திருந்தார்.
