ADDED : ஜூலை 09, 2026 02:51 AM
காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட இருவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனை செய்த தேனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குணா என்ற குணசேகரன், 25, கீழ்கதிர்பூரைச் சேர்ந்த செல்வம் என்ற மந்தவெளி செல்வம், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதால், காஞ்சிபுரம் எஸ்.பி., அரவிந்த் என்பவர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவிற்கு பரிந்துரை செய்தார்.
செல்வம், குணசேகரன் ஆகிய இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இருவருக்கும், குண்டர் தடுப்பு சட்டத்திற்குரிய காவல் ஆணையை, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வேலுார் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
