/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் ஒருவழி பாதையாக மாற்ற வலியுறுத்தல்
/
கோவில் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் ஒருவழி பாதையாக மாற்ற வலியுறுத்தல்
கோவில் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் ஒருவழி பாதையாக மாற்ற வலியுறுத்தல்
கோவில் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் ஒருவழி பாதையாக மாற்ற வலியுறுத்தல்
ADDED : அக் 07, 2024 12:40 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், சங்குபாணி விநாயகர், அபிராமீஸ்வரர் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.
விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் இக்கோவில்களுக்கு வருவோர் தங்களது வாகனங்களை, காமாட்சியம்மன் கோவில், உலகளந்தார் மாட வீதியில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக ‛பார்க்கிங்' செய்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் புற்றீசல் போல முளைத்துள்ள 10க்கும் மேற்பட்ட லாட்ஜ்களில் ‛பார்க்கிங்' வசதி இல்லாததால், லாட்ஜிற்கு வருவோர், தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் இங்குள்ள கோவில்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக பஞ்சுகொட்டி தெரு, காமாட்சியம்மன் சன்னிதி தெரு, உலகளந்த பெருமாள் மாட வீதி சந்திக்கும் நான்கு முனை சாாலை சந்திப்பில், விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
நெரிசலில் சிக்கிய பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி செல்வதற்குகூட வழியில்லாத நிலை உள்ளது.
எனவே, நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில், உலகளந்தபெருமாள் மாட வீதி, காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் ஒரு வழிபாதையாக மாற்றவும், பார்க்கிங் வசதி இல்லாமல் செயல்படும் லாட்ஜ்களுக்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அதிகபட்ச அபராத தொகை விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.