/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
/
பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 22, 2024 07:39 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு அதியமான் நகரில், 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 2017ம் ஆண்டு, 43 லட்சம் ரூபாயில் பூங்கா அமைக்கப்பட்டது.
இதில், செயற்கை நீரூற்று, நடைபயிற்சிக்கான நடைபாதை, சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், ஓய்வெடுக்கஇருக்கை வசதி, இரவில் ஒளிரும் மின்விளக்கு, பச்சை புல்தரையும், அழகிய பூச்செடிகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
பூங்காவை அதியமான் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம், பூங்காவை முறையாக பராமரிக்காததால், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சீசா உள்ளிட்ட உபகரணங்களும், இருக்கைகளும், கழிப்பறை கதவுகளும் உடைந்துள்ளன.
இதனால், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நடைபாதையிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது.
எனவே, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறை, இருக்கை, நடைபாதை உள்ளிட்டவை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.