/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
/
கான்கிரீட் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 11, 2025 11:21 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 50வது வார்டு, மதுரா மோட்டூர் பள்ளிக்கூட தெருவில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், முறையான மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், இத்தெருவில் வசிப்பவர்களே அவரவர் வீட்டின் முன் கான்கிரீட் கால்வாய் அமைத்துள்ளனர்.
காலிமனை உள்ள பகுதியில் மண் கால்வாயாக உள்ளதால், மண்திட்டுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், வீட்டில் இருந்து கழிவுநீர் முறையாக வெளியேறாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இப்பகுதியில் முறையான கான்கிரீட் தளத்துடன் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுரா மோட்டூர் பள்ளிக்கூட தெரு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

