/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வி.ஏ.ஓ., அலுவலகம் ஏற்படுத்த வலியுறுத்தல்
/
வி.ஏ.ஓ., அலுவலகம் ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 28, 2025 11:58 PM
வாலாஜாபாத்,வல்லப்பாக்கம் கிராமத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி, ஐந்தாவது வார்டில் உள்ள வல்லப்பாக்கம் கிராமத்தில் 400 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்போருக்கான வி.ஏ.ஓ., அலுவலகம், புளியம்பாக்கம் கிராமத்தில் செயல்படுகிறது.
வல்லப்பாக்கம் கிராமத்தில் வசிப்போர், தங்களது நிலங்கள் குறித்த ஆவணங்கள் பெறவும், பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்தல், ஜாதி, வருமான, இருப்பிடச் சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு, புளியம்பாக்கம் வி.ஏ.ஓ., அலுவலகம் வந்து செல்ல வேண்டி உள்ளது.
எனவே, வல்லப்பாக்கத்தில் பகுதி நேர வி.ஏ.ஓ., அலுவலகமாவது ஏற்படுத்தி செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.