/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்
/
தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்
தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்
தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 14, 2025 05:43 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த வடமாவந்தல் பேருந்து நிறுத்தத்தில், தலை சாய்ந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வடமாவந்தல் பேருந்து நிறுத்தத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் தலைசாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், 'சிசிடிவி' கேமரா அமைத்ததன் நோக்கமே வீணாகும் நிலை உள்ளது.
எனவே, தலைசாய்ந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை சீரமைக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

