ADDED : அக் 24, 2024 08:35 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட பகுதி நேர ரேஷன், கடை வாரத்தில் மூன்று நாட்கள் செயல்படும் என, அறிவித்து இருந்தனர்.
ஆனால், கடை எப்போது திறக்கப்படுகிறது என தெரியவில்லை. தினமும் சென்று ரேஷன் கடை திறந்து இருக்கிறதா என, பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வயதானவர்கள் தினமும் ரேஷன் கடைக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக வழங்குவது இல்லை. ஒரு பொருள் இருந்தால் மற்ற பொருள் இல்லாத நிலை உள்ளது.
ஒவ்வொரு பொருள் வாங்கும்போது, ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, ரேஷன் கடை திறந்திருந்திருக்கும் நாட்கள், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு விபரம், எந்த நாளில் எந்த பொருட்கள் வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்களை முறையாக அறிவிப்பு பலகையில் எழுத, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்த கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கார்டுதாரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.