/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர வளைவில் தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்
/
சாலையோர வளைவில் தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : அக் 13, 2025 12:40 AM

வாலாஜாபாத்:கரூர் சாலையில் அடுத்தடுத்த இரண்டு ஆபத்தான வளைவுகளில், தடுப்பு ஏற்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது கரூர் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, ராஜக்குளம் வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை உள்ளது.
வாலாஜாபாத் சுற்று வட்டாரப் பகுதியினர் மற்றும் செங்கல்பட்டு, ஒரகடம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை விரைவாக அடைவதற்கு இச்சாலை பயன்படுகிறது.
குறுகியதான இச்சாலையின் இருபுறமும், விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன.
இந்த வளைவுகளில் சாலையையொட்டிய விவசாய நிலங்கள் தாழ்வான பகுதியில் உள்ளது.
சாலை வளைவுகளில் பயணிக்கும்போது வேகமாக வரும் வாகனங்கள், சாலையோர தாழ்வான நிலப்பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே, அபாயகரமான வளைவு பகுதிகளில், சாலையையொட்டிய தாழ்வான பகுதிக்கு இரும்பு தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.