/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 17ம் தேதி வரை நீட்டிப்பு
/
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 17ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : அக் 12, 2025 10:42 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவ - மாணவியர் சேர்க்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், காஞ்சிபுரம் புத்தேரி, கைலாசநாதர் கோவில் தெருவில் புதிதாக, ஆக., 25ம் தேதி தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டது.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனபேக்டரிங் டெக்னீஷியன், அட்வான்ஸ்டு சி.என்.சி., கம்ப்யூட்டர் எய்டட் மேனுபேக்டரிங் ப்ரோகிராமர், டெக்னீஷியன் மெக்டானிக்ஸ், காஸ்மொட்டாலஜி ஆகிய தொழிற்பிரிவு பாடங்கள் பயிற்று விக்கப்படுகின்றன. இங்கு 47 மாணவர்கள், 20 மாணவியர் என, 67 பேர் பயின்று வருகின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கை, செப்., 30ல் முடியும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சேர்க்கைக்கான அவகாசம், அக்., 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஐ.டி.ஐ., படிப்பில் சேர, 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தவறிய மாணவ - மாணவியர் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 94990 55675, 98408 67350 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் காயத்ரி, பயிற்சி அலுவலர் எஸ்.செழியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.