/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 28, 2025 01:13 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 13வது வார்டில், வலம்புரி வினாயகர் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில் இருந்து, வீரராகவ சுபேதர் தெருவிற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
இந்த இரண்டு தெருக்களைச் சேர்ந்த பகுதிவாசிகள், வாலாஜாாத் பேருந்து நிலையம், பஜார் வீதி மற்றும் வாலாஜாபாத் பிரதான சாலைக்கு சென்று வர இச்சாலை வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், வலம்புரி வினாயகர் கோவில் மற்றும் வீரராகவ சுபேதர் தெருவின் இணைப்பு பகுதியில் பழுது ஏற்பட்டது.
மழை நேரங்களில் பழுதான அத்தெரு பகுதியில், மழைநீர் தேங்குவதை தவிர்க்க, பேரூராட்சி சார்பில், ஜல்லி கற்கள் கொட்டி சமன்படுத்தப்பட்டது.
அதையடுத்து, தற்போது வரை அப்பகுதியில் முழுமையான சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல் உள்ளது. இதனால், இத்தெரு வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் அவதிபடுகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் வீரராகவ சுபேதர் தெருவில் சிதிலமடைந்த சாலை பகுதியை சீரமைத்து தர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

