/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதுரப்பாக்கம் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்
/
மதுரப்பாக்கம் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 16, 2025 09:39 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வேம்பாக்கம் ஊராட்சி, சின்ன மதுரப்பாக்கம் கிராமத்தில் இருந்து, விவசாய நிலங்கள் வழியாக, அமணம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது.
மதுரப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி, வாரணவாசி, வாலாஜாபாத், படப்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், சின்னமதுரப்பாக்கம் - அமணம்பாக்கம் கிராம இணைப்பு சாலை, மிகவும் குறுகியதாக உள்ளது.
இதனால், இச்சாலையில், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
எனவே, குறுகிய அளவிலான இச்சாலையை அகலப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.