/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 05, 2024 12:33 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் எதிரில் உள்ள காந்தி நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், பூங்கா அருகில், சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் நீர்வழித் தடத்தில் மண் திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், கழிவுநீர் முழுமையாக வெளியேறாமல் கால்வாயில் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் மண்டி கிடக்கும் மண் திட்டுகளை அகற்றி, கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.