ADDED : நவ 12, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில், உயிர் நீத்தோர் சடலங்களை அப்பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரியம்மன் கோவில், சேர்க்காடு மற்றும் கீழாண்டை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மயானங்களில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த மயானங்களில் இறந்தோர் நினைவாக கல்லறைகள் அதிகம் கட்டப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும், வாலாஜாபாத் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சில மயானங்களிலும், சமீப காலமாக இடநெருக்கடி பிரச்னை அதிகரித்து வருகிறது.
இதனால், வாலாஜாபாத் பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

