/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சிகளில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
ஊராட்சிகளில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஊராட்சிகளில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஊராட்சிகளில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : பிப் 16, 2024 10:35 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் ஊராட்சியில், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயகுமார் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா உள்ளிட்டோர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்புலிவனம் ஊராட்சியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் அரசு தொகுப்பு வீடுகளுக்கான கட்டுமான பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். அதை தொடர்ந்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அப்பகுதியில் பொதுக்குளம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டனர். அப்பகுதி ஊராட்சி தலைவர் பிரதாப் மற்றும் ஊராட்சி செயலர் அமரேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோன்று, மருத்துவன்பாடி ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.