/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜவுளி பூங்காவில் உற்பத்தி துவங்க அழைப்பு
/
ஜவுளி பூங்காவில் உற்பத்தி துவங்க அழைப்பு
ADDED : பிப் 16, 2024 10:32 PM
காஞ்சிபுரம்:கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்கவும், உற்பத்தியை பெருக்கவும், தமிழகத்தில், 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்கு தேவையான தொழிற்கூடம், தறி, கிடங்கு, மின்சார வசதி, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
விருப்பமுள்ள தொழில் முனைவோர், உற்பத்தி செய்ய தேவையான மூலதனம், தொழில்நுட்பம், வியாபார சந்தை போன்றவை அமைத்து, பொது வசதி மையத்தில் உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.
கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், புதிதாக அமைக்கப்பட சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம், உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமல்லாமல், ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
விருப்பமுள்ளவர்கள், www.loomworld.in என்ற இணையதளத்தில், பிப்.22க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.