/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இசைபள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
/
இசைபள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 29, 2025 12:53 AM
காஞ்சிபுரம், தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறையால் நடத்தப்படும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2025- - 26ம் ஆண்டுக்கான சேர்க்கை இப்போது நடைபெறுகிறது.
இசைப் பள்ளியில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது.
இங்கு 12 - 25 வயது வரையிலான ஆண், பெண் என இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகளாகும்.
இசைப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வளாக நேர்காணல் வாயிலாக தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்படுகிறது.
மேலும், விபரம் வேண்டுவோர் இசைப்பள்ளி அலுவலகத்தை, 94425 72948 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, இசைப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.