sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சேர மாணவ - மாணவியருக்கு அழைப்பு

/

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சேர மாணவ - மாணவியருக்கு அழைப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சேர மாணவ - மாணவியருக்கு அழைப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சேர மாணவ - மாணவியருக்கு அழைப்பு


ADDED : ஜூலை 08, 2025 10:32 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் மாணவ - மாணவியர் சேர விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், 19 விடுதிகளுக்கு, 2025 - 26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஈஞ்சம்பாக்கம், செங்காடு, களியாம்பூண்டி, திருமுடிவாக்கம், திருப்புக்குழி, பெருநகர், ரெட்டமங்கலம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய 10 இடங்களிலும், பள்ளி மாணவியருக்கு காஞ்சிபுரம், வாலாஜாபாத் என ௨ இடங்களிலும் விடுதிகள் செயல்படுகின்றன.

கல்லுாரி மாணவர்களுக்கு 4 விடுதிகளும், மாணவியருக்கு 3 விடுதிகளும் என மொத்தம் 19 விடுதிகள் உள்ளன.

இந்த விடுதியில் மாணவ - மாணவியர் சேர, பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். தங்கியுள்ள வீட்டிற்கும் விடுதிக்கும் இடையே உள்ள துாரம் 5 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விருப்பமுள்ள மாணவ - மாணவியர் nallosai.tn.gov.in இணைய வழியாகவோ அல்லது விடுதி காப்பாளர் உதவியுடன் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us