/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய திட்ட பணியில் முறைகேடு? ஒழுக்கோல்பட்டு மக்கள் குற்றச்சாட்டு
/
புதிய திட்ட பணியில் முறைகேடு? ஒழுக்கோல்பட்டு மக்கள் குற்றச்சாட்டு
புதிய திட்ட பணியில் முறைகேடு? ஒழுக்கோல்பட்டு மக்கள் குற்றச்சாட்டு
புதிய திட்ட பணியில் முறைகேடு? ஒழுக்கோல்பட்டு மக்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 17, 2025 12:12 AM

காஞ்சிபுரம், பழைய மின் மோட்டார் அறையில், புதிய திட்டம் குறித்து தகவல் பலகை எழுதியதால், புதிய பணியில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என, கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஒழுக்கோல்பட்டு ஊராட்சியில், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால், ஆழ்துளை கிணறு மழை நீர் சேகரிக்கும் கட்டமைப்பாக மாற்றப்பட்டது. இருப்பினும், மின் மோட்டார் அறை பயன்பாடு இன்றி இருந்தது.
அதன் அருகே, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில், 9 லட்சம் ரூபாய் செலவில், புதிய ஆழ்துளை கிணறு சமீபத்தில் போட்டுள்ளனர்.
ஏற்கனவே இருந்த மின் மோட்டார் அறையை பயன்படுத்தி, புதிய மின் இணைப்பு பெற்று, புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து ஏற்கனவே போடப்பட்ட பழைய குழாயில் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.
ஒதுக்கீடு செய்த நிதியை, பணி ஒப்பந்தம் எடுத்தவர் முழுமையாக செலவிடவில்லை என, கிராம மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஒழுக்கோல்பட்டு கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
ஏற்கனவே இருந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைந்ததால், தனி அலுவலர் காலத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்பட்டது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம்.
பணி ஒப்பந்தம் எடுத்தவர் பில் பெறுவதற்கு பழைய கட்டடத்தில் திட்ட பலகை எழுதி உள்ளார்; வேறு ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்.