/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விண்ணப்ப படிவம் வழங்கல்
/
வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விண்ணப்ப படிவம் வழங்கல்
ADDED : மார் 19, 2024 09:34 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலின்போது, மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலிருந்தே ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அதன்படி, வீட்டிலிருந்தே ஓட்டளிக்கும் 12டி படிவத்தை, மாற்றுத்திறனாளிகள், முதியோர் என பலரது வீட்டிற்கு நேரில் சென்று நேற்று வழங்கினார்.
காஞ்சிபுரம் தாலுகா, கட்டவாக்கம் கிராமத்தில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 12டி படிவத்தை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 85 வயதுக்கு மேல், 14,270 பேரும், 13,677 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்ப படிவம் வழங்கும்போது, எஸ்.பி., சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கோட்டாட்சியர் கலைவாணி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

