/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு துறையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
/
கூட்டுறவு துறையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
கூட்டுறவு துறையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
கூட்டுறவு துறையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
ADDED : பிப் 04, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, கடந்த ஆண்டு டிச., 24ல் நடந்தது.
இதில், தேர்ச்சி பெற்ற 83 பேருக்கு கடந்த 19ல் நேர்முகத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளில், ஒட்டுமொத்த மதிப்பெண் அடிப்படையிலும், இடஒதுக்கீடு, இனசுழற்சி அடிப்படையிலும் 43 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணையை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.