/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை சந்திப்பில் ‛பேரிகார்டு' அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : அக் 02, 2024 01:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:-வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இச்சாலையில், ஒரகடம் அடுத்த, பனப்பாக்கத்தில் வைப்பூர் சாலை சந்திப்பு உள்ளது.
எறையூர், வைப்பூர் கிராமங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். தவிர, இந்த சாலையில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நிலையில், போக்குவரத்து நிறைந்த வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் இருந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எளிதில் இந்த சந்திப்பில் சாலையை கடக்க முடியவில்லை.
மேலும், ‛பீக் ஹவர்' நேரங்களில் தாறுமாறாக செல்லும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. அதேபோல, ஒரகடம் மார்க்கத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்களால், இப்பகுதி தொடர் விபத்து நடக்கும் பகுதியாக மாறியுள்ளது.
எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, இந்த சந்திப்பில் பேரிகார்டு அமைத்து வாகனங்களை ஒழுங்குபடுத்த ஒரகடம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.